தனக்கு பாராளுமன்றம் செல்ல தற்போதைக்கு தேவையில்லை பசில் ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு அதற்கேற்ற பொறுப்பு, அதிகாரங்கள் கட்டாயம் அவசியம்

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்காகவே தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கியதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை எனவும் தான் அல்லது தமது உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக கை உயர்த்தவில்லை எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் 20வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை நம்பியே செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

தனக்கு பாராளுமன்றம் செல்ல தற்போதைக்கு தேவையில்லை எனவும் வௌியில் நல்லம் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

vk

No comments