லங்கன்வொய்ஸ்.கொம்

பிரதான செய்திகள்


இன்றுமுதல் (26) நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில் பொது மக்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் ஒன்று கூடுவதை மறு அறிவித்தல்வரை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும், இளைஞர்கள் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதோடு முடியுமானவரை சமூக இடைவெளிகளைப் பேணி சுகாதார அமைச்சு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

நகர முதல்வர்
நகர சபை
காத்தான்குடி


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.
புதிய காத்தான்குடி விடுதி வீதியில் (Hostel Road) உள்ள வடிகான் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின்றது இதுவரை ஒரு தடவையேனும் அவ்வடிகான் துப்பரவு செய்யப்படாது உள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


மேற்படி வடிகானின் பயன்பாடு அதிகம் என்பதுடன் விடுதி வீதியின் இரு மருங்கிலும் உள்ள மக்கள் இவ்வடிகானை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக நீர் தேங்கி நிற்பதுடன் வழிந்தோடுவதற்கு தடையாக கழிவுப் பொருட்கள் பல அதனுள்கிடப்பதனை காணமுடிகின்றது.


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மேற்படி வடிகான் காத்தான்குடி நகரசபையினால் துப்பரவு செய்யாமலிருப்பது பெரும் கவலையான விடயம் மாத்திரமின்றி துப்பரவு செய்யப்படாமைக்கான காரணம் மற்றும் தான் எதிர்நோக்கும் பிரச்சினை தான் என்ன என்பதனையும் காத்தான்குடி நகர முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகின்றனர்.


மேற்படி வடிகான் தொடர்பாக காத்தான்குடி நகர முதல்வரிடம் அப்பகுதிக்கான RDS கடந்த 2019 ம் ஆண்டு எழுத்து மூலம் கடிதமொன்றினை அனுப்பியும் பலன் கிடைக்கவில்லையென RDS இன் தற்போதைய செயலாளர் எம்மிடம் தெரிவித்தார்.


காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதியிலேயே மேற்படி வடிகான் அமைந்துள்ளதனால் இன்றைய சூழ்நிலையில் ஒருபடி மேலாக இப்பகுதியினை சுத்தமாகவும், சுகா தாரமாகவும் வைத்திருப்பது காத்தான்குடி நகரசபை மற்றும் பொதுச் சுகாதார பணிமனையின் பொறுப்பும், கடமையும் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.


Covid 19 அச்சத்திற்குள்ளும் டெங்கு நோயின் அபாயம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்திருகின்ற நிலையில்  இவ்வடிகானினை சுத்தம் செய்து கொடுப்பது காலத்தின் தேவை என நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேற்படி வடிகானில் நீர்  வழிந்தோட முடியாமல் தடைப்பட்டு நிற்பதனால் துர்நாற்றம் வீசுகின்றதனை அவதானிக்க முடிகின்றது.   
அதே போன்று
சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள்  என பலரும் வீதியினைப்
பயன்படுத்தி  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது யார்.............?


மிக நீண்டகாலமாக மக்கள் எதிர்நோக்கி வந்த வடிகான் பிரச்சினைக்கு தற்போது
தீர்வு கிட்டியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட உரிய தரப்பினருக்கு மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.


இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது........

புதிய காத்தான்குடி 167/D கிராம சேவகர் பிரிவு, அமானுல்லா வீதி, (அல் அமீன் சந்தியில் உள்ள குறித்த வீதியின் ஒருபதி) கடந்த காலங்களின் சிறிய மழை பொழிந்த போதும் கூட வெள்ளநீரால் நிரம்பி மிகவும் மோசமாகப் பாதிக்கப் படுவதுமாகவே இருந்து வந்ததுடன் இது தொடர்பாக மக்கள் தங்கள் வட்டார உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல முறை சுட்டிக்காட்டியும் அது சாத்தியமற்றுப்போனதாகவே இருந்து வந்துள்ளது.


குறிப்பாக கடந்த காலங்களில்
இவ்வீதியால் செல்லும் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால் இன்று இதன் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ள ப்பட்டு வருவதனையிட்டு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

(யதார்த்தவாதி)
இலங்கை சுற்றுலா சபையின் அனுமதி மற்றும் பதிவுகளை செய்துள்ள கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் நாளை முதல் தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி தமது சேவைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வருகின்றவா என்பதைக் கண்காணிக்க ஆறு குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.sor.nlமகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் 26ஆம் திகதி ஆரம்பம் – காலை 4.30 தொடக்கம் 6.00 மணிவரையே இடம் பெறும். மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன. பஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிறு (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் கொழம்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்பு வரையில் மாத்திரமே இடம்பெறும். இலக்கம் 05 வீதி ஊடாகவரும்  மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடைவரை மாத்திரமே வரும்;.காவி வீதி ஊடாக வரும் பஸ்கள் பாணதுறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக வரும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து; நீர்கொழும்பு வீதியில் கொழும்பு வரும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும். அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார் .

இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஸ்கள் போதியளவு இல்லா விட்டால், நாம் அவற்றை கொண்டு வருவோம். சேவையில் ஈடுபடாத பஸ்களையும் நாங்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம். பஸ்களில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உண்டு. கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம்' என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.sor/nk


ISIS பயங்கரவாதிகளினால் இலங்கையின் பொருளாதார மையத்தைத் தாக்குதல் நடத்தும் ஆபத்து குறித்து புலனாய்வு துறையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிகாரியான லுதினல் கர்னல் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கடிதமொன்று சமூக ஊடகங்களினுள் பரவிவருவது குறித்து விசாரணை செய்வதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின்   HR பிரிவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 மே 18ம் திகதி இந்த கடிதம் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதுதான் அரசாங்கத்தினால் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்ததுடன் இதுபோன்ற தாக்குதலுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் 100% தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.


எவ்வாறாயினும் இந்த கடிதம் தொடர்பாக லுதினல் கர்னலிடம் கேட்டபோது புலனாய்வு பிரிவினால் இத்தகைய எச்சரிக்கையை விடுத்ததாக தனக்கு தகவல் அளித்தது இந்த  நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மிக உயர்ந்த அதிகாரிகளில் ஒருவரால் என அவர் குறிப்பிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.sor.lnw


“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் தொடர்பில் புத்தகம் எழுதவுள்ளேன். இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் அப்பணியை செய்துமுடிக்க உத்தேசித்துள்ளேன்.” – என்று இறுதிப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், பொட்டம்மான் உட்பட புலிகள் அமைப்பின் எந்தவொரு தளபதியும் இறுதிக்கட்டபோரின்போது தப்பிச்செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
இலத்திரனியல் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் கூறியவை வருமாறு,

போரின் இறுதிகட்டம்வரை பிரபாகரன் களத்தில் இருந்தார். தீவிரவாதியாக இருந்தாலும் ஒரு தலைவராக இறுதிவரை அவர் போரிட்டதையிட்டு – ஒரு இராணுவ அதிகாரியாக நான் அவருக்கு மதிப்பளிக்கின்றேன்.

யுத்தத்தின்போது பிரபாகரனை உயிருடன் பிடிப்பதற்கு முயற்சிக்கவில்லை. கடைசிவரை போரிட்டு அவரை கொன்றதே சரியான செயல் என கருதுகின்றேன். ஏனெனில் கே.பி., கருணா அம்மான் போன்றோர் தற்போது சுதந்திரமாக அரசியல் செய்கின்றனர். கருணா அம்மான் யாருடன் அரசியல் செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியும்.

பிரபாகரனையும் உயிருடன் பிடித்திருந்தால், போர் முடிவடைந்திருந்தாலும் அவரும் பிரபல நபராகியிருப்பார். வடக்கையும், கிழக்கையும் ஆளும்நிலையை அரசியல் ரீதியில் உருவாக்கியிருப்பார். அதற்கு அப்போதைய அரசியல்வாதிகளும் அனுமதி வழங்கியிருக்ககூடும். எனவே, பிரபாகரனை கொன்றதே சரியென நினைக்கிறேன். அவர் உயிருடன் வேண்டும் என எங்கிருந்தும் உத்தரவு வரவில்லை.

பிரபாகரன் இராணுவத்தின் பலவீனத்தை தெரிந்துகொண்டார். எம்மைவிடவும் குறைந்த ஆளணிபலம் இருந்தும் தாக்குதல் நடத்தினர். பிரபாகரன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட தாக்குதல் நடத்தி இலக்கை நோக்கி நகரமுயற்சிப்பார். தனக்கு எதிரான அரசியல்வாதிகளை கொன்தொழித்தார். தற்கொலை படையைக்கூட உருவாக்கினார்.

புலிகளே போரை ஆரம்பிப்பார்கள். அவர்கள் தாக்குதல் நடத்திய பின்னரே முகாம்களை பாதுகாப்பதற்கு பதிலடிகொடுக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் நான் போர்வியூகத்தை மாற்றியமைத்தேன்.வீதிகளில் பயணிக்காமல் கஷ்டமாக இருந்தாலும் இராணுவத்தை காட்டுக்குள் குழுக்களாக களமிறக்கினேன். புலிகளின் பலமான பகுதிகளில் அதிரடியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவது எனது இலக்காக இருக்கவில்லை. அவர்களை ஒழிக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது புலிகள் தாமாகவே பின்நோக்கிச்சென்றனர்.

புலிகளின் தளபதிகளுள் ஒருவரான பால்ராஜ் மாரடைப்பதால் இறந்தார் என அவ்வமைப்பினர் கூறினாலும், பரந்தனில் இடம்பெற்ற தாக்குதலொன்றின்போதே அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

போரின் இறுதிகட்டத்தில் புலிகள் தப்பியோடமுடியாத வகையில் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் தப்பியோட முயற்சித்தபோது இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது பொட்டு அம்மான், தற்கொலை குண்டை வெடிக்கச்செய்து உயிரிழந்தார் என கே.பி. தகவல் வெளியிட்டிருந்தார். இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். எனவே, புலிகள் அமைப்பின் எந்தவொரு தளபதிகளும் தப்பிச்செல்லவில்லை.

போரை நிறுத்தும் நிலைப்பாட்டில் இந்தியா இருக்கவில்லை. அதேபோல் யுத்தத்துக்கு உதவிகளை வழங்கவும் இல்லை. பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கியது. சீனாவில் இருந்து ஆயுதங்கள் எடுத்துவரப்பட்டன. ஆனால், மேற்குலக நாடுகள் போரை எதிர்த்தன. அதாவது யுத்தத்தை எவராலும் முடிவுக்கு கொண்டுவரமுடியாது. இறுதியில் மனித உயிரிழப்புகள்தான் ஏற்படும் என கருதியதாலேயே அந்நாடுகள் எதிர்த்தன என நினைக்கின்றேன். அதேபோல் கடைசிநேரத்தில்கூட போர்நிறுத்த உடன்படிக்கையை செய்து கொள்வது சம்பந்தமாக சில மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் பேச்சு நடத்தினர்.

அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் புத்தகம் எழுதுவதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை. தற்போது எதிரணியில் இருக்கின்றேன். இனி நேரம் கிடைக்கும் என நம்புகின்றேன். புத்தகம் எழுதுவேன். ஓரிரு வருடங்களில் முடிக்கலாம். பல அனுபங்களையும், தகவல்களையும் பகிரக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.sor/ku

கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர்கள் அனுமதி வழங்கியவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை முழு நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சர் கூறியுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இலங்கை பாதுகாப்பான நாடாக கருதுகின்றது. கொரோன தொற்றுநோயை இலங்கை கையாண்ட விதத்தில் இந்த வெளிநாட்டு நாடுகள் அனைத்தும் நம்பிக்கை கொண்டுள்ளது.விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா பரவாமல் பாதுகாப்புடன் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget