மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று சுதந்திரமாக சேவையாற்றும் களநிலவரம் உருவாக்கப்படல் வேண்டும் சட்டத்தரணி அஸ்வர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று சுதந்திரமாக சேவையாற்றும் களநிலவரம் உருவாக்கப்படல் வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி MIM அஸ்வர் தெரிவித்துள்ளார்.

அன்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் S. வியாழேன்திரன், R. சாணக்காயன், K. கருணாகரன், S. சந்திரகாந்தன் மற்றும் A.Z நசீர் ஆகிய இவர்கள் தங்களது சேவைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதற்குரிய கள நிலமையை உருவாக்கிக கொடுப்பது அனைத்து ்பிரதேசங்களில் இருக்கும் சிவில் அமைப்புகளிளன் தலையாய பொறுப்பாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் முழு மாவட்டத்திற்கும் உரியவர் என்பதை அனைவரும் உணர்ந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். இன, மத, பிரதேச ரீதியாக பிரிந்து நிற்பதால் எமது மாவட்டத்தை ஒரு போதும் கட்டி எழுப்ப முடியாது. ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் ஆதரவாகவும் எல்லா நிலைமைகளிலும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டால் தேசிரீதியாக முகம் கொடுக்க இருக்கும் சவால்களை இலகுவாக எதிர் கொள்ள முடியும்.

குறிப்பாக அபிவிருத்தி அரசியலுக்கு அப்பால் எமது அனைத்து மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவது மிக அவசியமாக இருக்கிறது. தத்தமது சமயம் சார்ந்த உரிமைகளை எத்தகைய தடங்கலும் இன்றி அனைத்து மக்களும் அனுபவிப்பதற்கான சூழல் உருவாக்கப்படல் வேண்டும். சமூகங்களுக்கு இடையில்இருக்கும் சந்தேகங்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக களையப்படல் வேண்டும். இனவாதம் மதவாதம் பிரதேசவாதம் முற்றாக தகர்க்கப்படல் வேண்டும். 

உண்மைக்கு உண்மையாக இதய சித்தியுடன் அரச இயந்திரங்கள் செயற்படும் நடைமுறை உருவாக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைக்க வேண்டிய உரிமைகளை தடுக்காத, தட்டிப்பறிகலகாத அரசியல் கலாசாரம் உருவாக்கபபடல் வேண்டும். மாவட்டத்தின் எந்த பகுதியில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டாலும் எமது மாவட்டம் என்ற உணர்வு எம் அனைவர் மத்தியிலும் உருவாக வேண்டும். அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் புறக்கணிப்புகள் இடம் பெறாமல் கிடைத்திருக்கும் சங்க சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தினால் எம்து மாவட்டம் முன்னுதாரண மாவட்டமாக பதியப்படும். மேலும் இணக்க மற்றும் புரிந்துணர்வு அரசியல் கலாசாரம் எமது மாவட்டத்தில் உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கையின் முதல்தர மாவட்டமாக எமது மாவட்டத்தினை கொண்டுவருவது கடினமானதாக இருக்காது.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களாக இருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையான பயணமே இருசமூகங்களுகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்கப் போகிறது. கடந்த காலங்களில் இரு சமூகங்களும் முகம் கொடுத்த சம்பவங்கள் எமக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

எனவே தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக ஒண்றித்து பயணிப்பதற்கு ஊடாக சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்குவது மட்டுமல்லாது பரிய அபிவிருத்தி பணிகளை இலகுவாக எமது மாவட்டத்தில் முன்னெடுத்து செல்லமுடியும். இதனூடாக மக்களை வாழவைக்கும் பணிகளையும் புதிய தொழில் வய்ப்புகளை்உருவாக்கி தொழில் அற்ற மக்களுக்கு தொழில்களை வழங்கி சுபாட்சமான மாவட்டத்தை கட்டியைழுப்ப எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments