காத்தான்குடியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருடனும் தேர்தல் தொடர்பான சந்திப்புக்களை மேற்கொள்வது இல்லை என காத்தான்குடி சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக தகவல்.

KF
காத்தான்குடியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருடனும் தேர்தல் தொடர்பான சந்திப்புக்களை மேற்கொள்வது இல்லை என காத்தான்குடி சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடியில் போட்டியிடும் வேட்பாளர்கள் காத்தான்குடி சம்மேளனத்துடன் சினேகபூர்வ சந்திப்பு ஒன்றினை மேற்கொள்வது தொடர்பில் அனுப்பிய கடிதம் தொடர்பில் ஆராய்ந்த போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்மேளன உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் காத்தான்குடி வேட்பாளர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர். பொறியியலாளர் சிப்லி பாரூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் காத்தான்குடி வேட்பாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரகுமான் ஆகியோர்கள் அனுப்பிய கடிதம் தொடர்பாக (05 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சம்மேளனத்தின் வாராந்த கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.No comments