“தேர்தலுக்கான வழிமுறைகள் நடைமுறை சாத்தியமற்றவை”பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்திட்டங்கள் நடைமுறை சாத்தியமற்றவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் சம்பந்தமாக விதிமுறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்கு சாத்தியமற்றவையாகவே இருக்கின்றன.

குறிப்பாக பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். கூட்டத்துக்கு 100 பேர் அல்லது 500 பேர் வருவதாக இருந்தால் அவர்களின் பெயர்பட்டியலை வழங்கவேண்டுமாம். இதனை செய்யமுடியுமா?

எனவே தேர்தல் தொடர்பில் தெளிவில்லாத, அனுபவம் அற்றவர்களே இவ்வாறான விடயங்களை செய்துள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பு நடைபெறுமானால் வரிசையானது ஒரு கிலோமீற்றரையும் தாண்டிச்செல்லும்.

எனவே, அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இவற்றை உருவாக்கியிருக்க வேண்டும். அவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமானால் சிறப்பான யோசனைகளை முன்வைக்க கூடியதாக இருந்திருக்கும்.” – என்றார்.

அதேவேளை இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் கூட்டங்களுக்கு வருபவர்களின் பெயர் பட்டியலை சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறை சாத்தியமற்றவை. அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் இவ்வாறான முடிவுகளை எடுக்கமுடியாது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.sork

No comments