கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா ஜஹம்பத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் குழுவினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு


கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா ஜஹம்பத் அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் குழு  (11) காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் குறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.


குறிப்பாக போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுனர் குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன. தற்போது செயலிழந்த நிலையில் காணப்படுகின்ற CT ஸ்கேனர் இயந்திரம் பழுதடைந்து மூன்று வார காலங்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது  ஆரம்ப காலத்தில் கொண்டு வரப்பட்டமை என்றும் குறிப்பிட்டனர்.


மேற்படி CT ஸ்கேனர் இயந்திரமானது தற்போது செயலிழந்திருக்கின்ற காரணத்தினால் நோயாளர்களை அம்பாறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். 

மேலும் ஒரு நாளைக்கு 16 முதல் 25 வரையான நோயாளர்கள் வருகை தருவதனால் இவர்களை அம்பியுலன்ஸில் ஐந்து பேருக்கு மேல் அனுப்பமுடியாமையும் அதை விட விபத்துக்களில் சிக்கிய நோயாளர்களை உடனடியாக வைத்தியம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்.இச் செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய நவீன தொழில் நுட்பம் அடங்கிய CT ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெறுவதற்கான சகல உத்தியோக பூர்வ  நடவடிக்கைகழும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைப்பதிலே சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆளுனர் தன்னுடைய கவனத்திற்கு எடுத்து துரிதமாக பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர்..


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொருத்தப்பட்டுள்ள புற்றுநோய்களுக்கான கதிர் இயக்க இயந்திரம் இதுவரை நோயாளர்களுக்கு பாவனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கே குறிப்பாக இந்த புற்று நோய் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்திலே நிறுவப்பட்டு பலகோடி ரூபா பெறுமதிவாய்ந்த இயந்திரங்கள் எதையும் செயல் படுத்தமுடியாத நிலையில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுபதிற்கு மேற்பட்ட வைத்திய நிபுனர்கள் இருக்கின்ற போதும் வைத்திய உபகரணங்கள் இயந்திரங்களின் தட்டுப்பாட்டினால் முழுமையான சிகிச்சையினை இங்கு வழங்க முடியாதிருப்பது குறித்தும் ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டது.


இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, வைத்திய நிபுனர் சசிகலா, வைத்திய நிபுனர் சுந்தரேஸ்வரன், வைத்திய நிபுனர் சுரேசினி ராஜேந்திரம், வைத்திய நிபுனர் நிர்மல் ராஜ், வைத்திய நிபுனர் அருள் நிதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிய சிங்ஹ, ஆளுனர் செயலாளர் பிரசன்ன மத நாயக ஆகியோர் கலந்துகொண்டனர். No comments