பிரத்தியேக வகுப்புகள் தொடர்பில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர


பிரத்தியேக வகுப்புகள் தொடர்பில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என 
பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர  தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


குறிப்பாக
பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போது வகுப்பறைகள் தொற்று நீக்கி விசிறப்படல் வேண்டும் என்பதுடன், நிலையான நிருவாக சபையொன்று செயல்பட்டு கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நடவடிக்கைகள் தொடராக பின்பற்றப்படல் வேண்டுமெனவும், இதனை மீறுவோறுக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வர் என 
மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேகர  
தெரிவித்தார். 


இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸ், மட்டக்களப்பு பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமாரஸ்ரீ, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் முகமட் பாறூக், இராணுவத்தின் 231வது படையணி கட்டளை அதிகாரி, சிறைச்சாலை உட்பட செயலணியின் பலபிரிவு அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.   


No comments