கோவிட் 19 கூட்டு முயற்சியின் பயனாக, எமது நாடு வெற்றியைப் பெற்றாலும் அலட்சியமாக இருந்து விட வேண்டாம் ஜனாதிபதி


“உலகின் பெரும் நாடுகளே கோவிட் 19 தொற்றுநோயின் கடும் தாக்கத்துக்கு இலக்காகி, தொடர்ச்சியான பாதிப்பினால் அவதியுறும் நிலையில் - சுயகட்டுப்பாட்டுடனான பெருமைமிகு கூட்டு முயற்சியின் பயனாக, எமது நாடு ஒரு மெய்ச்சத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆனாலும், கோவிட் 19 நோய்க்கிருமி முழுமையாக இன்னும் அழிக்கப்பட்டு விடவில்லை;

மீண்டும் பரவி அது எம்மைத் தாக்கக்கூடிய அபாயத்திலிருந்து நாம் இன்னும் விடுபட்டுவிடவில்லை.

எல்லாம் முடிந்துவிட்டது என்ற எமது அலட்சியம் - மீண்டும் ஒருமுறை நோய்க் கிருமியைக் கட்டுக்கடங்காது பரவச்செய்யக்கூடும்.

முன்னையதை விடவும் பாரதூரமான ஒரு தாக்கத்துக்கு நாம் உள்ளாகக்கூடும்.

எனவே, சுகாதாரத் துறை மற்றும் அரசாங்க தற்காப்பு வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்றி, சுய ஒழுக்கத்தோடு நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எமது நாட்டு மக்கள் அனைவரையும் நான் பணிவன்போடு வேண்டி நிற்கின்றேன்.”

No comments