பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதும் 19 இற்கு முடிவு கட்டுவோம்!


பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் இரத்து செய்யப்படும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை எமது கூட்டணி பெறும். அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள். அதன் பின்னர் ஆட்சி அமைக்கப்படும்.

எந்தவொரு ஆட்சி வந்தாலும் அதனை உரிய வகையில் கொண்டு நடத்துவதற்கு 19ஆவது திருத்தச்சட்டம் பெரும் தடையாக இருக்கின்றது. எனவே, அந்த சட்டம் இல்லாதொழிக்கப்படும்.

அடிப்படைவாத கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம். பங்காளிகளாகவும் இணைத்துக்கொள்ளமாட்டோம் என்பதை பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அதேவேளை தொல்பொருள் ஆராய்ச்சி குறித்த ஜனாதிபதி செயலணிக்கு நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது.” – என்றார்.sor.k

No comments