தேர்தல் ஆட்டத்தை 10 ஆம் திகதி ஆரம்பிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட மாநாடொன்று எதிர்வரும் (10) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பொதுத்தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள்மீதான பரிசீலனைகள் நிறைவுபெற்று, அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து தேர்தலை நடத்துவதற்கான தீவிர நடவடிக்கையில் தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என நம்பப்படும் நிலையில் அதற்கான திகதி  (8) நிர்ணயிக்கப்படவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும், எத்தகைய உபாயங்களைக் கையாளவேண்டும் என்பன உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத்தேர்தலுக்கான விஞ்ஞாபனமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதும் பிரதான நிகழ்வொன்றில் அது மக்கள் மயப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.sor.k

No comments