சுகாதார சீர்கேடு..வடிகானை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை....

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.
புதிய காத்தான்குடி விடுதி வீதியில் (Hostel Road) உள்ள வடிகான் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின்றது இதுவரை ஒரு தடவையேனும் அவ்வடிகான் துப்பரவு செய்யப்படாது உள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


மேற்படி வடிகானின் பயன்பாடு அதிகம் என்பதுடன் விடுதி வீதியின் இரு மருங்கிலும் உள்ள மக்கள் இவ்வடிகானை அதிகம் பயன்படுத்துவதன் காரணமாக நீர் தேங்கி நிற்பதுடன் வழிந்தோடுவதற்கு தடையாக கழிவுப் பொருட்கள் பல அதனுள்கிடப்பதனை காணமுடிகின்றது.


சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மேற்படி வடிகான் காத்தான்குடி நகரசபையினால் துப்பரவு செய்யாமலிருப்பது பெரும் கவலையான விடயம் மாத்திரமின்றி துப்பரவு செய்யப்படாமைக்கான காரணம் மற்றும் தான் எதிர்நோக்கும் பிரச்சினை தான் என்ன என்பதனையும் காத்தான்குடி நகர முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகின்றனர்.


மேற்படி வடிகான் தொடர்பாக காத்தான்குடி நகர முதல்வரிடம் அப்பகுதிக்கான RDS கடந்த 2019 ம் ஆண்டு எழுத்து மூலம் கடிதமொன்றினை அனுப்பியும் பலன் கிடைக்கவில்லையென RDS இன் தற்போதைய செயலாளர் எம்மிடம் தெரிவித்தார்.


காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையம் அமைந்துள்ள பகுதியிலேயே மேற்படி வடிகான் அமைந்துள்ளதனால் இன்றைய சூழ்நிலையில் ஒருபடி மேலாக இப்பகுதியினை சுத்தமாகவும், சுகா தாரமாகவும் வைத்திருப்பது காத்தான்குடி நகரசபை மற்றும் பொதுச் சுகாதார பணிமனையின் பொறுப்பும், கடமையும் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.


Covid 19 அச்சத்திற்குள்ளும் டெங்கு நோயின் அபாயம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்திருகின்ற நிலையில்  இவ்வடிகானினை சுத்தம் செய்து கொடுப்பது காலத்தின் தேவை என நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேற்படி வடிகானில் நீர்  வழிந்தோட முடியாமல் தடைப்பட்டு நிற்பதனால் துர்நாற்றம் வீசுகின்றதனை அவதானிக்க முடிகின்றது.   
அதே போன்று
சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள்  என பலரும் வீதியினைப்
பயன்படுத்தி  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது யார்.............?

No comments