இம்ரான் MP களத்தில் 3500 குடும்பங்களுக்கு பொதிகள் வழங்கி வைப்பு விமர்சனங்களை கைவிட்டு தன்னோடு இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்க அழைப்பு


இம்ரான் MP களத்தில் முதல் கட்டமாக 3500  குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு விமர்சனங்களை கைவிட்டு தன்னோடு இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவிக்கையில்

எனது U and V நிறுவனம் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் அல்ஹித்துமத்துல் உம்மா நிறுவனத்துடன் இணைந்து இந்த அசாதாரண சூழ்நிலையால்  தொழிலை இழந்து ஜீபனோபயத்துக்கு கஷ்டப்படும் திருகோண மலை மாவட்டத்தின்  3500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக  உலர் உணவுகளை நேற்று முதல் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

இன,மத,பிரதேச,கட்சி வேறு பாடுகளின்றி முன்னெடுக் கப்படும் இத்திட்டத்தில் அடுத்த கட்டத்தில் மேலும் பல குடும்பங்களுக்கு இந்த உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  
இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் முன்னெடுக்கும் இந்த உதவிகளை விளம்பரப்படுத்தினால் அது இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடும் முயற்சியாக பார்க்கப்படும் என்ற நோக்கத்துடனயே நான் இது தொடர்பான புகைப்படங்களையோ செய்திகளையோ சமூக வலைதளங்களில் பிரசுரிக்கவில்லை.

இருந்தபோதும் சில உள்நாட்டு,வெளிநாட்டு நண்பர்கள் சமூக ஊடகங்களில் எமது செயற்பாடுகள் சம்மந்தமாக பல விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப் பதை அவதானித்தேன். அதிலும் சக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் இதையும் அரசியல் கண்கொண்டு நோக்கி எல்லைமீறி விமர்சித்தது மிகவும் கவலையளித்தது.

நான் இவர்களிடம் அன்பாய் கேட்டுக்கொள்வது எமது ஊரும் நாடும் தற்போது நான் நீங்கள் நினைப்பதை விட பாரிய அச்சறுத்தலுக்கு மத்தியில் உள்ளது.இது அரசியல் செய்யும் நேரமல்ல.எம்மிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து வாருங்கள். ஒன்றாக இணைந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வோம்.

நீங்கள் சமூக ஊடகங்களில் விமர்சிப்பதால் ஒரு ஏழையின் பசியை போக்கிவிட முடியாது அந்த இணைய சேவைக்கு செலவிடும் பணத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ அரிசி வாங்கி கொடுக்கலாம்.

அரசாங்கத்தின் உதவி வரும்வரை எதிர்பார்க்காமல் எம்மால் முடிந்த உதவிகளை எமது சக்திக்கு உட்படட விதத்தில் நாம் செய்வது இந்த அசாதாரண சூழ்நிலையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த உதவும். எனவே எம்மால் முடிந்த உதவிகளை கஷ்டடப்படும் எமது குடும்பம்,  அயலவர்கள்.மற்றும் நன்பர்களுக்கு வழங்கிவைப்போம்.

அத்துடன் இந்த செயற்பாடுகளுக்கு என்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக
இதன் போது தெரிவித்தார்.

No comments