பல்லாயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் காத்தான்குடி மத்திய கல்லூரியின் 90வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றன.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இன் 90வது வருடாந்த
இல்ல விளையாட்டுப் போட்டி.
வித்தியாலயத்தின் அதிபர் அல்ஹாஜ் SH. பிர்தெளஸ்  தலைமையில் (14.02.2020 வெள்ளி)
பாடசாலை மைதானத்தில்  மிகவும் கோலாகலமாக
இடம் பெற்றன.


நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முன்னாள் ஆளுதர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா PhD கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விசேட மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.SMMS.உமர் மெளலானா SLEAS, காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JP,


காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் AGM. ஹக்கீம் SLEAS,  மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி நிருவாக உத்தியோகஸ்தர் CM. ஆதம் பெப்பை,
காத்தான்குடி முன்னாள் பிரதேச கல்விப் பணிப்பாளர், அல்ஹாஜ் MACM. பதுர்தீன் JP உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின்  அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கொண்டனர்.

பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரினதும் பாரிய பங்களிப்புடன் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.


விளையாட்டு விழாவின் போது மாணவர்களின் மைதான நிகழ்வுகள், அனிநடை, பேன்ட் வாத்தியம், இல்ல அலங்காரம் என்பவற்றினைக்கான  பெற்றோர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்ததினைக் காணமுடிந்தது.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக் கிண்ணங்கள், பணப்பரிசில்கள்  வழங்கி கெளரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இறுதியாக 216 புள்ளிகளைப் பெற்று றூமி இல்லம் முதலாம் இடத்தினை தட்டிக் கொண்டது.

இல்லங்கள் பெற்ற புள்ளிகள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
01) றூமி இல்லம்         216 
02) இக்பால் இல்லம்.  215
03) உமர் இல்லம்.         132

இல்ல அலங்காரம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 
முதலாமிடம்,     றூமி இல்லம்
இரண்டாமிடம். இக்பால் இல்லம்
மூன்றாமிடம்.    உமர் இல்லம்
 
அணி நடை .
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முதலாமிடம்.      றூமி இல்லம்
இரண்டாமிடம்.  உமர் இல்லம்
மூன்றாமிடம்.     இக்பால் இல்லம்

உடற்பயிற்ச்சி கண்காட்சி.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முதலாமிடம்  இக்பால் இல்லம்
இரண்டாமிடம்    றூமி இல்லம்
மூன்றாமிடம்   உமர் இல்லம்No comments