ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் கைது !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நில மோசடி குற்றச்சாட்டிலே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்களை தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் ரிப்கான் பதியூதினுக்கு எதிராக மருதானை பிரதேசத்தில் வசித்த நபரொருவர் செய்த புகாருக்கு அமையவே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.sor/lnw

No comments