காத்தான்குடியில் சுவர் ஓவியம் வரையும் தமிழ் சகோதரர்கள் .......


(ஏ.எல்.டீன்பைரூஸ்)
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய அரச மற்றும் தானியருக்குச் சொந்தமான (வீதி ஓரங்களில் உள்ள) சுவர்களில் பல்வேறுபட்ட ஓவியங்கள் வரையும் திட்டமானது நாடு பூராகவும்   மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதனைக் காணமுடிகின்றது.

அந்த வகையில் காத்தான்குடியில் உள்ள அரச பாடசாலையில் சுவர் ஓவியம் வரையவென தாமாகவே முன்வந்த தமிழ் சகோதர்களின் ஆர்வம் மற்றும் முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும்.

காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் பொது அமைப்புகள் பல இருந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று செய்வதற்கு யாரும் முன்வராத நிலையே காணப்படுவதாக காத்தான்குடியில் உள்ள ஒரு அரச பணியகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் உரியவர்கள் கூடிய கவனம் செலுத்தி பொருத்தமான ஓவியங்களை வரைவதில் அசமந்தமாக இருத்தல் அல்லது தாமதித்தால் தவிக்க நேரிடும் என்பதே யதார்த்தமாகும்.
சிந்தியுங்கள், உடன் செயல்படுங்கள்.
No comments