முன்னாள் மாகான சபை உறுப்பினரான மாஹிர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று!

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

ஏமாந்ததும் − ஏமாற்றியதும் போதும்...
சம்மாந்துறை மாஹிர் பரபரப்பு கருத்து.

ஏமாந்ததும் − ஏமாற்றியதும் போதும்...
சம்மாந்துறை மாஹிர் பரபரப்பு கருத்து

முகாவிலிருந்து வெளியேறுகிறேன். இன்று இரவு (30−01−2020) அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன் என்கிறார் முகாவின் முன்னாள் மாகான சபை உறுப்பினரான ஐ.எல்.எம். மாஹிர்.

2015 ஆம் ஆண்டே , நான் முகாவை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். அதனை செய்யாமல் விட்டது எவ்வளவு மடத்தனம் என்பதை இப்போது உணர்கிறேன்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தருவதாக கூறி ஏமாற்றிய ரவூப் ஹக்கீம் , மாகாண சபை அமைச்சுப் பதவியை தராமலும் ஏமாற்றினார்.

கடந்த, சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலின் போது − தவிசாளர் வேட்பாளராகவும் என்னை அவர் பிரகடணப்படுத்தவில்லை..

இவை ஒருபுறம் இருக்கட்டும் , நகர அபிவிருத்தி அமைச்சராக ஹக்கீம் பதவி வகித்த போது − சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கென ஒரு சதம் கூட ஒதுக்கித் தரவில்லை.. பல முறை கெஞ்சியும் அவர் பணத்தை ஒதுக்கவில்லை.. வேறு சில முறைகளில் சம்மாந்துறை அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதிகளையும் தடுத்து நிறுத்தினார்..

இதற்குப் பிறகும் நான் அந்தக் கட்சியில் இருப்பதை எனது ஆதரவாளர்கள் விரும்பவில்லை..

இன்று இரவு , சம்மாந்துறையில் எனது ஆதரவாளர்கள் , அபிமானிகள் என அணைவரையும் சந்தித்து எனது முடிவை அறிவிக்கவுள்ளேன்.

முகாவிலிருந்து வெளியேறிய பின் , எந்தக் கட்சியில் இணைவது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.

No comments