கொரோனா நோய்கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கு உள்நாட்டுப் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய மருத்துவ முறைகளைத் துரிதமாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர பணிப்பு.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க உள்நாட்டு மற்றும் மேற்கத்திய மருத்துவ நிபுணர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்குமாறு சுகாதார அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இன்று, சனாதிபதி செயலகத்தில் சுகாதார, வெளியுறவு, சுற்றுலா மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல்களை  வழங்கி யுள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் இப்போது குணமாகி வருகின்றார். இலங்கை மருத்துவர்கள் நோய் பரவுவதைத் தடுக்கும் திறன் கொண்டவர்கள். இந்த விளைவைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைவரின் முயற்சியையும் ஜனாதிபதி பாராட்டியதுடன், மேலும் அவர்களின் பணியைத் தொடர வேண்டியுள்ளார்.

நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் சீனாவிலிருந்து இலங்கை மாணவர்களைத் திரும்ப அழைத்து வர எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் நாம் விரிவாக ஆய்வு செய்தோம்.

மேலும், சீனாவின் வுஹான் மானிலத்தில் இருந்து ஏற்கெனவே திரும்பிவிட்ட மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கவும், அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதுடன்,

இந்த உலக சுகாதார அச்சுறுத்தலுக்கு மத்தியில் எமது சுற்றுலாத் துறையைப் பாதுகாத்துத் தக்கவைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயும்படியும் எடுத்துரைத் துள்ளார்.

மருத்துவமனைகளில் வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்தவும் நோய் தடுப்பு ஆய்வுகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 
அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள் சாமல் ராஜபக்‌ஷ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, அருந்திகா பெர்னாண்டோ, பவித்ரா வன்னியராச்சி உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments