தாரீகுந் நபி போட்டி நிகழ்ச்சிகள்.


காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பால் திட்டமிட்ட படி பிரதேச பாடசாலை மாணவா்களுக்கிடையிலான இஸ்லாமியப் போட்டிகள் அனைத்தும் எதிர்வரும் மீலாத்தை முன்னிட்டு   27/10/2019 ம் திகதி ஒரே நாளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பிரதேசத்திலுல் ல 26  பாடசாலைகளைச் சேர்ந்த சுமார்  மானவர்கள் 350 மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

போட்டிகள் யாவும் காத்தான்குடி மட்/மீரா பாலிகா தேசிய பாடசாலையில்  உலமாக்கள்,ஹாபிழ்கள், திறமையாக அனுபவப்பட்ட வளவாளா்களால் நடாத்தப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கான போட்டி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை இலக்கங்கள் கிடையாதவர்களுக்கு போட்டி நடைபெறும் கரும பீடத்தில் வழங்கப்படும்.

போட்டிகள் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். பெண்பிள்ளைகள் பாதுகாப்பக வருகைதருவதோடு தமது பாடசாலையை அடையாளப்படுத்தாத சீருடைகளுடன் வரவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.


No comments