நீண்ட காலத் தேவையான அரசஒசுசல மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் அமையும்!


மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலன் கருநி, நோயாளர்களின் மிக நீண்ட கால தேவையாகவுள்ள “அரச ஒசுசல” ஒன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைய வேண்டியதை உணர்த்தி பல தடவைகள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமிடம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் முன்வைத்த கோரிக்கையின் பலனாக,
        மட்டக்களப்பு மாவட்டத்தில் “அரச ஒசுசல” அமைப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 
       
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மிகவும் பயன்பாடான இம்முயற்சி மிக விரைவில் நிறைவேறும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியளார் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

No comments