காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டினில் தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பாரிய நோய் நிவாரண நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தொற்றா நோய்கள்" தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (2019/09/01) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தலைவர் MACM.சத்தார் தலைமையில் சம்மேளன அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. 


மேற்படி நிகழ்வின் சிறப்பு விரிவுரையினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியகலாநிதி சுந்தரேசன் (VP) அவர்கள் நிகழ்த்தினார்.

நீரிழிவு, மாரடைப்பு, கொலஸ்ட்ரால், கேன்சர் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான முன் ஆயத்த வழிமுறைகள் போன்ற விடயங்கள் விரிவாக தெளிவு படுத்தப்பட்டது. மேலும் வருகை தந்திருந்த பார்வையாளர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் வைத்திய கலாநிதி சுந்தரேசன் Dr.M. ஜலால்தீன் ஆகியோர்களினால் விளக்கமளிக்கப்பட்டதுடன்,  சம்மேளன உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments