மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் காத்தான்குடியில் திறந்து வைப்பு!(S.சஜீத்)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்துடன் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் 2016-2020யின் கீழ் கல்வி அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் (09) இன்று  ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் S. சரீப்தீன் (M.Ed) அவர்களின் தலைமையில் ஆரம்பக் கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வைபவ ரீதியாக கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுமேலும் அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். சிப்லி பாறூக், முன்னாள் நகரசபை உறுப்பினர் யூ.எல்.எம்.என் முபீன், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர். எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா (SLEAS), காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹகீம் (SLEAS), வலயக் கல்வியலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்  மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

No comments