அஷ் ஷஹீட் அஹமட்லெப்பை ஞாபகார்த்த கிரிக்கட் இறுதிச் சுற்றுப்போட்டியின் காத்தான்குடி ஹுசைனியா வி.கழகம் சம்பியனானது பிரதம அதிதியாக பொறியியலாளர் சிப்லி பாறூக் பங்கேற்பு


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி றிஸ்வி நகர் சலாவிளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அஷ் ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி  இன்று (01.09.2019 ஞாயிறு) தாருஸ்ஸலாம் மைதானத்தில் 
இடம்பெற்றது.


மேற்படி இறுதிப்போட்டியில் பங்கேற்ற காத்தான்குடி ஹுசைனியா விளையாட்டுக் கழகம் காத்தான்குடி இலாஹீஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டு அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த கிறிக்கட் சுற்றுப்போட்டியின் கிண்ணத்தை சுபீகரித்துக்கொண்டது.


போட்டியின் பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காத்தான்குடி நகரசபையின் இன்னால் உறுப்பினருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் கலந்து கொண்டதுடன் போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற கழகத்திற்கான 
வெற்றிக்கிண்ணங்களையும்  பொறியியலாளர் சிப்லி பாறூக் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.No comments