கல்முனை சாஹிரா அபிவிருத்திக்கு ஐந்தாண்டுத் திட்டம் சகலரதும் ஒத்துழைப்பினைக் கோருகிறார் அதிபர் ஜாபிர்(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமைமிக்க கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையை அபிவிருத்தி மிகு பாடசாலையாக முன்னெடுத்துச் செல்வதற்கு வகுக்கப்பட்டுள்ள ஐந்தாண்டுத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறோம் என புதிய அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள முஹம்மத் இஸ்மாயில் ஜாபிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய அதிபராக பதவியேற்ற அவர்எமக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆண்டுத் திட்டத்தில்கல்வியில் பாரிய ஓர் எழுச்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு செயலணியை,  பாடசாலை அபிவிருத்திச் சங்கம்பழைய மாணவர் சங்கம்ஏனைய நலன்விரும்பிகள்பிரதேச அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

அருகில் உள்ள பாடசாலைசிறந்த பாடசாலை திட்டப் பணிப்பாளருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸினால் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து கல்வி அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பல கட்டட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்அவரது நிதி ஒதுக்கீட்டிலும் பாடசாலையில் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கு உத்தேசித்துள்ளார்.  

இதனடிப்படையில் அவரது சொந்த நிதி ஒதுக்கீட்டில் முதற்கட்ட  வேலைத்திட்டமாக 100 மில்லியன் வேலைத்திட்டத்தில் பாடசாலையின் பௌதீக வள தேவைகளான கட்டிட நிர்மாண வேலைகளில் குறிப்பாக பாடசாலை நிர்வாகக் கட்டத்தொகுதியும்அடுத்த 100 மில்லியன் வேலைத்திட்டத்தில் 1600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடமும் அதனை அமைப்பதற்குமான அடிக்கல் நடும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடப்படவுள்ளது. 

 

பாடசாலையின் இதர தேவைகளான மைதானத்தை புனரமைத்துத்தருவதற்கான வேலைத்திட்டமும் அத்தோடுபார்வையாளர் அரங்கு மற்றும் வெளிச்சமூட்டும் மின்கம்பம் எல்ஈடீயின் வசதியோடு செய்து தருவதற்கான வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இந்த திட்டத்தோடு எதிர்வரும் ஆண்டுத் திட்டத்தில் பாடசாலையின் பௌதீகஆளனி மற்றும் சேவைகளைப் பூர்த்தி செய்வதோடுகல்வியில் பாரிய எழுச்சியை ஏற்படுத்திக் காட்டக்கூடிய இலக்கை சமூகம் என்னிடம் தந்துள்ளது. அதனை நிறைவேற்றும் வரையில் அனைவரின் ஒத்துழைப்புடனும் இப்பாடசாலையை கட்டி எழுப்புவதற்கு பழைய மாணவர்கள்பாடசாலை அபிவிருத்திச் சங்கம்ஏனைய நலன் விரும்பிகள் போன்றோரின் ஒத்துழைப்பினை வேண்டி நிற்பதாகவும் அதிபர் ஜாபிர் தெரிவித்தார். 

அதற்கான கூட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி 3ஆம் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டவுடன் பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோர்களுடனான சந்திப்புகள்பழைய மாணவர்களுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு கருத்துக்கள் பெறப்பட்டுஅவர்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கிபாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

பல சர்ச்சைகளின் பின்னர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக மீண்டும் நியமிக்கப்பட்ட எம்.ஐ. ஜாபிர் (SLEAS gen, SLPS, SLTES) தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 நியமனக் கடிதத்தினை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம். சலாஹுதீனால் முன்னாள் இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபராக முறையான நியமனம் எம்.ஐ. ஜாபிருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரைக்கும் தொடர்ந்தேச்சையாக அதிபரின் கடமைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

2017 கல்விச்சேவைக்குள் இணைந்த இவர்கல்வித்துறையின் சேவைகளான அதிபர் சேவை (SLPS), கல்வி நிர்வாக சேவை (SLEAS), ஆசிரியர் கல்வியலாளர் சேவை (SLTES) ஆகிய சேவைகளின் போட்டிப் பரீட்சையில் தோற்றி, 3 சேவைகளிலும் ஒரு வருட காலத்திற்குள் சிறப்புத் தேர்ச்சி பெற்று சித்தியடைந்து சாதனை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

No comments