ஒட்டமாவடி பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளை மீட்கும் வழிவகைகளை ஆராய்வதற்கான விசேட கூட்டம்!மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம்கள் இழந்த ஐந்து கிராம அலுவலகப் பிரிவுகளையும் மீட்டெடுப்பதற்கான விசேட ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டம் எதிர்வரும் 07.07.2019 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிமை) பி.ப. 04.00 மணிக்கு ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ மஸ்ஜித்துக்கு அருகிலுள்ள எம்.எம். பாறுக் அவர்களது ரைஸ் மில் மண்டபத்தில் (தாருல் உலூம் பாடசாலைக்கு அருகில்) நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு சமூக அர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஒருங்கிணைப்பு : கல்குடா மஜ்லிஸ் ஷூரா

No comments