ரதுஇர அரசியல் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ

தற்கொலை குண்டுதாரியின் தந்தையான இப்றாஹீம் என்பவர் 1983 களில் இருந்து சிறுக சிறுக வியாபாரத்தின் மூலம முன்னேறிய ஒருவர்,இலங்கையிலும் சர்வதேசத்திலும் பல  நினைவ சின்னங்களை பெற்றவர் என்பதால் எமது கட்சியின் தேசிய பட்டியலில் அவரது பெயர் உள்ளீர்க்கப்பட்டது.இவரது மகன் 2019 ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரியாக மாறுவர் என்று நாங்கள் அல்ல எவராலும்  உறுதியாக தெரிவித்திருக்க முடியாது.


ஆகையால் இந்த சம்பவத்துடன் எம்மை பயங்கரவாதிகளாக கூறமுடியுமா என கேள்வி எழுப்பினர் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ.


சுவர்ணவாஹினியில் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற ரதுஇர அரசியல் கலந்துரையாடலில் இதனைதெரிவித்தார்.

No comments