காத்தான்குடி பிரதான வீதியில் பாரிய விபத்து சாரதி தப்பியோட்டம்.

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (10.05.2019) வெள்ளிக்கிழமை காலை 08.15  பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

தனியாருக்குச் சொந்தமான  பஸ் ஒன்று முச்சக்கர வண்டி மேல் மோதியதால் இப்பாரிய விபத்து இடம் பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்.......

குறித்த பஸ்ஸின் சாரதி தனக்கு முன்னால் சென்ற மேலும் ஒரு தனியார் பஸ் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறுக்கு வீதியிலிருந்து வந்த முற்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போதுதான்  

இவ்விபத்து இடம் பெற்றுள்ளதுடன் விபத்துக்குள்ளான ஆட்டோ மோதுண்டு சுமார் 15 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டதாகவும் நேரில் கண்டவர்கள்  தெரிவித்தனர். 

குறித்த  முச்சக்கர வண்டியின் சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

போக்குவரத்துப் பொலிஸார் விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.No comments