தெஹிவளை தற்கொலை குண்டுதாரி ஒரு விமானப் பொறியியலாளர் என பொலிசார் தெரிவிப்பு

எம்.எல்.எஸ்.முஹம்மத்

இரத்தினபுரி


தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகிலுள்ள உணவகமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குலை மேற்கொண்டவர் கண்டி வெலம்பொட பகுதியைச் சேர்ந்த லதீப் ஜெமீல் முஹம்மட் (வயது31)எனப்படும் முஸ்லிம் விமானப் பொறியியலாளர் என சிரேஷ்ட பொலிஸ்அதிகாரி ஒருவர் சிங்கள செய்தி ஊடகமொன்றிற்கு கடந்த(22)ஆம் திகதி தெரிவித்துள்ளார்.

அவ்வதிகாரி தொடர்ந்து தெரிவிக்கையில்

மேற்படி தற்கொலைதாரியான பொறியியலாளர் சில காலமாக வெளிநாட்டில் வசித்து வந்துள்ளார்.அத்துடன் கொழும்பு பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலையானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments