நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான, மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் பொறியியலாளர் சிப்லி பாறுாக்
இன்றைய தினம் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான, மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக முன்னால் கிழக்க மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம் பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்க இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் 30 வருட கால யுத்தம் நிறைவுற்று 10 வருடங்கள் கடக்கும் தறுவாயில் இன ஐக்கியத்தையும் புரிந்துணர்வுகளையும் இல்லாமல் செய்து மீண்டும் இந்த நாட்டை பயங்கரவாத்த்துக்குள் இட்டுச்செல்ல முயலும் இத்தொடர் குண்டுத்தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.


No comments