பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வும் புதிய பதிவுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்

ஏ.எல்.டீன் பைரூஸ்

நாட்டிற்காய் ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்தத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட  பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான விஷேட செயலமர்வும் புதிய பதிவுச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 2019.04.09ம் திகதி பி.ப.2.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பள்ளிவாசல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் நடமாடும் சேவை மூலம் நிவர்த்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத புதிய பள்ளிவாசல்கள்  இலங்கை வக்பு சபையில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ள முடியும். ஏ.எல்.ஜுனைதீன்  பொறுப்பதிகாரி  முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களம். பிராந்திய காரியாலயம்.

No comments