ஊர் மக்கள் பொறுப்புடன் செயற்படுமாறு மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனம் வேண்டுகோள்

எம்.எல்.எஸ்.முஹம்மத்

நாட்டில் தற்போது நிலவியுள்ள அசாதாண நிலைமையை கருத்திற் கொண்டு ஊர் மக்கள் மிகப் பொறுப்புடன் செயற்படுமாறு மாவனல்லை மஸ்ஜித் சம்மேளனம் பொது வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மஸ்ஜித் சம்மேளனம் நேற்று(22) வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் முக்கிய அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

1.தனிநபர்கள் இருவக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை சமூகப் பிரச்சினையாக மாற்றாது உடனடியாக அது பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தி குறித்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
2.ஊரிற்கு புதிதாக வருபவர்கள் தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மேலதிக தேவைகள் ஏற்படின் அவர்கள் பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.
3.ஊரில் வாடகைக்கு வீடுகளை வழங்குபவர்கள் அது தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் கிராம அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பதுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உரிய பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
4.பெண்கள் உரிய பாதுகவலர்கள் இன்றி வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்வதுடன் முக மூடி பர்தா அணியும் பெண்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தேவையான போது  தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும்.
5.வெளியே செல்லும் போது அனைவரும் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
6.நாட்டில் அவசகால சட்டம் அமுலில் உள்ளதால் இரவு நேரங்களில் வீனாக வெளியே சுற்றித் திருவதையும் மற்றும் குழுவாக கூடி நின்று கதைப்பதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
7.அறிமுகமற்ற நபர்கள் மற்றும் வாகனங்கள் ஊரினுள் வருகின்ற போது  அது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments