ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மலேசியாவுக்கு விஜயம்

ஊடகப்பிரிவு

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மலேசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான மெனேஜ்மெண்ட் சன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்.

இதன்போது எம்.எஸ்.யூவினுடைய தலைவர் டாக்டர் சுக்ரி அவர்களை கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் பேராசியர் அலி மற்றும் சிரேஷ்ட  பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.அத்துடன் எம்.எஸ்.யூவுக்கும் மட்டக்களப்பு கெம்பசுக்கும் இடையில் உறவுகளை வளர்ப்பது, ஜப்பானிய பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினையும் எம்.எஸ்.யூவையும் இணைத்து உடன்பாடு செய்வது தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு 

மிக விரைவில் எம்.எஸ்.யூவினுடைய தலைவர் மட்டக்களப்பு பல்கலைகழகத்துக்கு வருகை தருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்கள் பல்வகையிலான நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments