சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைக்கட்டிடங்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்துவைப்பு.

ஊடகப்பிரிவு

இலங்கை அமெரிக்க நற்புறவுத்திட்டத்தினூடாக சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமெரிக்க நாட்டு நிதியில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கட்டிடங்கள் என்பன இன்று திறந்துவைக்கப்பட்டது.

வித்தியாலய முதல்வர் ஏ.எல்.ஏ.நாபீத் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இக்கட்டிடங்களை திறந்துவைத்தார்.

நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க நாட்டுத்தூதுவர் அலைனா பீ.டிப்லிட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments