பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் தமிழ்,சிங்கள புத்தாண்டு விழா பிரதம அதிதியாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.

(ஊடகப்பிரிவு)

கிழக்கு மாகாண 23வது பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் தமிழ்,சிங்கள புத்தாண்டு விழா வந்தாறுமூலையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.

இனங்களுக்கு மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 23வது பாதுகாப்பு படைப்பிரிவு ஏற்பாடு செய்த புத்தாண்டு விழா இன்று காலை மட்டக்களப்பு வந்தாறுமூலை மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண படைப்பிரிவின் எஸ்.எப்.தளபதி மேஜர் ஜெனரல் அருன ஜெயசேகர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.

வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதய குமார்,23வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கபில உடலுபொல உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இதன்போது தமிழ்,சிங்கள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்கும் வகையில் மாவட்டத்தின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் பங்கேற்றதுடன் மாலை இசை நிகழ்வு இடம்பெற்று இன்று நள்ளிரவுடன் கொண்டாட்டங்கள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments