முழு வடகிழக்கிலும் நாளை துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பு விடுதியில் இன்று மாலை இடம் பெற்றது.

(ஊடகப்பிரிவு)
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பு விடுதியில் இன்று மாலை இடம் பெற்றது.
நேற்று இடம்பெற்ற சம்பவத்தினால் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் எவ்வாறு பொதுமக்களை நடாத்துவதற்கான வழிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டு விடாமல் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை வளர்ப்பதற்கு துரித செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துறைராஜ சிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதன்போது நாளை முழு வடகிழக்கிலும் துக்கதினமாக அனுஸ்டிக்க தீர்மானமும் எடுக்கப்பட்டது.

No comments