ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால்"ஷைகுல் பலாஹ்"நினைவு மண்டபம் திறந்துவைப்பு.

(ஊடகப்பிரிவு) 

இஸ்லாமிய மார்க்க வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றி மறைந்த அதிசங்கைகுரிய மௌலானா மௌலவி மர்ஹூம்"ஷைகுல் பலாஹ்"அப்துல்லாஹ் றஹ்மானியின் நினைவாக ஏறாவூரில் அமைக்கப்பட்ட பாடசாலை பிரதான மண்டபம் அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் ஏறாவூர் அல்-முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில்"ஷைகுல் பலாஹ்"அவர்களின் பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை முதல்வர் முஹம்மத் முஆத் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பாடசாலையில் கல்வி ரீதியில் பல்வேறு வகையில் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை வழிநடாத்திய ஆசிரியர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

No comments