மட்டு-குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை இரத்த வங்கிக்கு வழங்கி வைப்பு-தற்போது இரத்தம் தட்டுப்பாடு இல்லைபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவிடம் வினவிய போது மட்டக்களப்பு குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டபோது இரத்த வங்கி பிரிவிடம் காணப்பட்ட குருதி மற்றும் குருதி சிறு தட்டுக்களை வழங்கியதோடு மேலதிகமாக உடனடியாக இரத்த வங்கிக்கு குருதி வழங்குவதற்கு வருகைதந்த குருதி நன்கொடையாளர்களிடம் குருதியை பெற்று வழங்கியதாகவும் அதற்கு மேலதிகமாக பொலன்னறுவைஇதிருகோணாமலைஇஅம்பாறைஇகல்முனை ஆகிய இரத்த வங்கிகளிடமிருந்து குருதி மற்றும் குருதி சிறு தட்டுக்கள் உடனடியாக எமது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

எனவே தற்போது போதுமான இரத்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் காணப்படுவதால் இரத்தம் வழங்குவதற்காக வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுக்கு இனம்இமதம்இமொழிஇபிரதேசம்இதூரம் பாராது வருகைதந்த 1500க்கும் மேற்பட்ட பொது மக்கள் இரத்த தட்டுப்பாடு நிலவும் போது தொலைபேசி மூலம் அழைப்பதற்காக தங்களது விபரங்களை மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments