காத்தான்குடி கோட்டமட்ட பாடசாலைகள் தரம் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் வளமாக்கிகள் வழங்கிவைப்புஏ.எல்.டீன் பைரூஸ்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அனுசரனையுடன் யுனிசெப் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் கற்றல் வளமாக்கிகள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் தேசமானிய, தேசகீர்த்தி அல்ஹாஜ் MACM.பதுர்தீன் JP தலைமையில் (17.04.2019 புதன்) இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப் பணிப்பாளர்  IM. இப்றாஹீம் ADE,  ஆசிரிய ஆலோசகர்களான MRM. நவாஸ் ISA, AM. ஜாபிர் கரீம் ISA, ML. அலாவுதீன் ISA, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.No comments