தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக திருகோனமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் முக்கிய செயலமர்வு

எம்.எல்.எஸ்.முஹம்மத்

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பாக திருகோனமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் முக்கிய செயலமர்வொன்று கடந்த சனிக்கிழமை(30) திருகோனமலை எகெட் கரித்தாஸ் நிறுனத்தில் இடம்பெற்றது.

கடந்த 41 வருடங்களுக்கும் மேலாக திருகோனமலை மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் மத நல்லிணக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும்  "எகெட் கரித்தாஸ்" நிறுவனத்னால் ஏற்பாடு செய்யப்பட்ட  மேற்படி செயலமர்வு நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஜே.பி.பிரான்ஸிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய திட்ட முகாமையாளர் பிரான்ஸிஸ் குறிப்பிடுகையில்

 "ஊடகவியலாளர்கள் சமூகத்தின் பிரதான அங்கமாக உள்ளனர்.அவர்களின் கருத்துக்கள் தேசத்தின் வெற்றிக்கும் தோல்விற்கும் காரணமாக அமைகின்றன. 


கடந்த பல தசாப்தங்களாக கரித்தாஸ் நிறுவனம் இந்த நாட்டில்  தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் பல்வேறு சமூகப் பணிகளிலும், அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் மிக நிதானமாக ஈடுபட்டு வருகிறது. 


ஊடகவியலாளர்கள்தான் எமது தூதர்களாக இருக்கின்றனர்.அவர்கள் ஊடாகத்தான் சமூகத்திற்கு எமது நற்செய்திகளை கொண்டு செல்ல முடிகின்றோம்.ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ்டன் பெற்றிக் ஜோசப் மற்றும் திருகோனமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி நோயல் இமானுவேல் ஆகியோரின் வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் எம்மை தொடர்ந்தும் உற்சாகப் படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதன்  திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.றிஸ்மி விளக்கமளித்தார்

No comments