திருகோணமலை துறைமுகத்திற்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்.

அவுஸ்திரேலியா எச்.எம்.ஏ.எஸ்.சக்ஸஸ் சிப் கெப்டன் டரன் குரேகனின் அழைப்பின் பேரில் ஆளுநர் MLAM.ஹிஸ்புல்லாஹ் திருமலை துறைமுகத்திற்கு விஜயம்.

(ஊடகப்பிரிவு) 

இலங்கை அவுஸ்திரேலியா நற்புறவுத்திட்டத்தினூடாக இலங்கை திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள எச்.எம்.ஏ.எஸ்.சக்ஸஸ் கப்பலின் பிரியா விடை வைபவத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று மாலை விஜயம் செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையினை வந்தடைந்த கப்பல் நாளைக்காலை பதினொரு மணிக்கு திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது.

ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை அவுஸ்ரேலிய கலாசாரதத்தின் படி மரியாதை செலுத்தி சிப் கெப்டன் டரன் குரேகன் தலைமையிலான குழுவினர் மகத்தான வரவேற்பு வழங்கினர்.

No comments