புலமை பரிசில் பரீட்சையில் அதிஉயர் சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்

(ஊடகப்பிரிவு)

மட்டக்களப்பு, திருகோணமலை பொலன்னறுவ ஆகிய மாவட்டங்களில் புலமை பரிசில் பரீட்சையில் அதிஉயர் சாதனைபடைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் பங்கேற்புடன் காத்தான்குடியில் இடம் பெற்றது.

இலங்கை கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டு நடாத்தப்பட்ட புலமை பரிசில் பரீட்சையில்  மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவ ஆகிய மாவட்டங்களில் அதிஉயர் சாதனைபடைத்த மாணவர்களையும் சித்தி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த வழிகாட்டிய ஆசிரியர்கள், அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கை கல்வி அபிவிருத்தி மன்றத்தின் காத்தான்குடி பிரிவிற்கான இணைப்பாளர் முகம்மது மீராசாஹிப் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று மாணவர்களையும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.

வைபவத்தில் இலங்கை கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எஸ்.எல்.மன்சுர் உள்ளிட்ட கல்வியாளர்கள் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 458 மாணவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 91 மாணவர்களும் பொலன்னறுவ மாவட்டத்தில் 48 மாணவர்கள் அடங்களாக மொத்தமாக 597 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் தேசியரீதியில் புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் தகவல்கள் அடங்கிய தொகுப்பான புலமைதாரகை எனும் நூல் வெளியிடப்பட்டதுடன் அதன் முதல் பிரதி ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

No comments