இரத்த பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்காத மருத்துவமனைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- பிரதமர் ரணில்


டெங்கு நோயளர்களின் இரத்த பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்காத மருத்துவமனைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச இரசாயன ஆய்வுகூடங்களின் நிறைவாண்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்க மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது கட்டாயம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
sor/kn

No comments