காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு ஆளுநர் ஹிஸ்புல்லா திடீர் விஜயம்

சென்ற (29.03.2019 வெள்ளிக்கிழமை)  கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார். 

பாடசாலைக்குச் சென்ற ஆளுநர் பாடசாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டட வேலைகளைப் பார்வையிட்டதுடன் மிகுதியாகக் காணப்படும் வேலைகளை உடனடியாகப் பூர்த்தி செய்து கட்டடத்தை விரைவாக திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் ஜனாபா. ஜெஸீமா முஸம்மிலுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதன் போது காத்தான்குடி நகர சபையின் தவிசாளர்  SHM.அஸ்பர், மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் பணிப்பாளர் HA. ஹிராஸ், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் M. ஜவாத், பாடசாலையின் பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் என பலரும் உடனிருந்தனர்.

2018 க.பொ.த (சா/தர) பெறுபேறுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட ஆளுநர் இதற்காக பங்களிப்புச் செய்த மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள்,  பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பின ர்கள் போன்றொருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments