பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி ஐக்கியதேசியக் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலக அலுவலகம் காத்தான்குடியில் திறந்து வைப்பு.

பிரதமரின் எழுபதாவது பிறந்த தினத்தையொட்டி ஐக்கியதேசியக் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலக அலுவலகம் காத்தான்குடியில் திறந்து வைப்பு.

(ஊடகப்பிரிவு) 

ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் கௌரவ பிரதம மந்திரியுமான ரணில் விக்கிர சிங்கவின் எழுபதாவது பிறந்த தினத்தையொட்டி காத்தான்குடி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் கட்சியின் மாவட்ட முகாமையாளர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளரின் பங்கேற்புடன் நேற்று மாலை காத்தான்குடியில் கொள்கைபரப்பு செயலக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கொள்கை பரப்புச் செயலாளராக பிரதமரின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி நாட்டின் அமைதி, சமாதானம் வேண்டியும்  அவரது நீண்ட ஆயுளுக்காகவும் விசேட துஆப்பிரார்த்தனை உலமாக்களால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments