காங்கேயனோடைக்கான தாய், சேய், பராமரிப்பு நிலையம் விரைவில் நிர்மாணிக்க ஏற்பாடு பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவிப்பு

மிக நீண்டநாள் தேவையாக இருந்து வரும் காங்கேயனோடைக்கான தாய், சேய், பராமரிப்பு நிலையம் ஒன்று அமைப்பதற்கான முன்மொழிவுகள் காங்கேயனோடை வட்டாரக்கிளையின் தலைவரும் அவ்வட்டார அமைப்பாளருமான முன்னாள் மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மதீன் அவர்களாலும் வட்டாரக்கிளை அங்கத்தவர்கள் ஊர்வாசிகளினாலும் முனமொழியப்பட்டிருந்ததாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்

இதற்கிணங்க இராஜாங்க அமைச்சர்  பைசல் காசிம் அவர்களால் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய இடத்தையும் திட்டமிடலையும் செய்வதற்காக இலங்கை கட்டடநிர்மான திணைக்கள பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்  குழுவின் இன்று (23.03.2019 வெள்ளி)  காங்கயனோடைக்கு  விஜயம் மேற்கொண்டு இடங்களை பார்வையிட்டனர்.

இதன் போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களும், காங்கேயனோடை ஜாமியுல் மஸ்ஜித் செயலாளர் , நிர்வாகசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேற்படி கட்டிட நிர்மாணப் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

No comments