சிறப்பாக இடம்பெற்ற பெண்களுக்கான கருத்துரை நிகழ்வு..

எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடியில் இயங்கிவரும் சமூக,சமய வலையமைப்பான முஹாசபா வலையமைப்பின் அந் நிஸா பிரிவின் ஏற்பாட்டில்  பெண்களுக்கான இலவச கருத்துரை நிகழ்வு  முஹாசபா வலையமைப்பு அந் நிஸா பிரிவின் தலைவி சகோதரி ஹனீஸா பஹ்த் தலைமையில் விம்பிள்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

"குடும்ப பெண்களின் சிறப்பும் , பொறுப்பும்" எனும் தலைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ILM. றிபாஸ் MBBS,MSC அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது..

No comments