பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் 2018ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா.


(S.சஜீத்)
பிஸ்மி நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் 2018ம் ஆண்டிக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை நேற்று பி.ப 4.00 மணியளவில் பிஸ்மி நிறுவன கேட்போர் கூடத்தில் பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். MSM. நுஸ்ரி (நளீமி) BA அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிஸ்மி நிறுவனத்தின் வளவாளரும் கொழும்பு அமல் சர்வதேசப் பாடசாலையின் பயிற்றுவிப்புக்கும், அபிவிருத்திக்குமான பிரிவின் தலைவருமான அஷ்ஷெய்க். MTM. சப்ரி (நளீமி) ) HND in T&D BA, MSC in HRM & D (Reading) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் இணைப்பாட விதான, துணைப் பாடவிதான செயற்பாடுகளின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் பெற்றோருக்கு விஷேட உரை ஒன்றினையும் நிகழ்த்தினார், சிறப்பு அதிதிகளாக MACM. சத்தார் (B.Sc, B.Ad) அதிபர், மீரா பாலிகா தேசிய பாடசாலை, JUM. ஜெஸீமா முஸம்மில் (B.A, Dip in Edu, SLPS) அதிபர், மட்/ மம/ மில்லத் மகளிர் மகா வித்தியாலயம், MA. அல்லாஹ் பிச்சை (M.A, SLPS) அதிபர், மட்/ மம/ அந்நாஸர் வித்தியாலயம், காத்தான்குடி, AC. ஆதம் அலி (SLPS) அதிபர், மட்/ மம/ அல்-அக்ஷா வித்தியாலயம், காங்கேயனோடை, மௌலவியா. IN. சித்தி நயீமா அப்துஸ் ஸலாம் (B.A, Dip in Edu, SLPS) அதிபர், மட்/ மம/ ஸாவியா வித்தியாலயம், காத்தான்குடி, ஆகியோரும் கலந்து சிறப்பினத்தனர்.


இந்நிகழ்வில் பின்வரும் துறைகளுக்காக மாணவ, மாணவிகள் பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அல்குர்ஆன், ஆரம்ப பாடநெறியைப் (சஹாதா) பூர்த்திசெய்தோர், 2018ம் ஆண்டில் இரண்டாம், மூன்றாம் தவணைப் பரீட்சைகளில் ஆறு பாடங்களில் முன்னேற்றகரமான புள்ளிகளைப்பெற்றோர் மற்றும் கூடுதல், புள்ளிகளைப்பெற்றோர், கரப்பந்து, குறிபாத்து எய்தல், கரம், டாம் ஆகிய போட்களில் வெற்றியீட்டியோர், பாடல், நாடகப் போட்டிகளில் வெற்றியீட்டியோர், பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலைக்கு அதி கூடிய நாட்கள் வருகை தந்தோர், என்ற ஆறு தலைப்புக்களின் கீழ் சுமார் 200 மாணவ, மாணவிகள் சான்றிதழ்களையும், நினைவுச்சின்னங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments