சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் சிரமதானமும், இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு


 


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை திருநாட்டின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் நேற்று முன்தினம்திங்கட்கிழமை பல்வேறு சமூக அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.இதன் ஓர் அங்கமாக நேற்று முன்தினம் 4ம் திகதி காலை மட்டக்களப்பு –மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலயத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றப் பிரதிநிதிகளினால் கொட்டும் மழையிலும் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 4 திங்கட்கிழமை மாலை காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் மாணவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து, மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்ற இமாரா பொறுப்பாளர் எம்.எம்.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் தலைவர் ஆசிரியர் எம்.ஏ.நிஹால் அஹமட், முன்னாள் மட்டக்களப்பு பிராந்தியத் தலைவர் ஆசிரியர் ஏ.எல்.ஏ.சிப்லி, சமூக விவகார பொறுப்பாளர் டாக்டர் எல்.எம். சனீஜ்,மன்றத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.அஸ்மி தாஜூதீன் ,ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் முன்னாள் தலைவர் இஸட்.எம்.சஜி உட்பட ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.இங்கு முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டது.  குறித்த முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் மூக்குக் கண்ணாடி தேவையான மாணவர்களுக்கு அதிதிகளினால் இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments