காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகம், குபா ஜூம்ஆ பள்ளிவாயல் இணைந்து நடாத்திய மூன்றாவது இரத்ததான நிகழ்வு.(S.சஜீத்)
காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகம் மற்றும் குபா ஜும்ஆ பள்ளிவாயல் இணைந்து ஏற்பாடு செய்த மூன்றாவது இரத்ததான முகாம் (06) ஞாயிற்றுக்கிழமை குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்கடர். டீ. பிரபா சங்கர் அவர்கள் தலைமையிலான குழுவினர் இரத்ததான முகாமினை நடத்தினர்.

"உதிரம் கொடுத்து உயிர்காப்போம்" எனும் தொணிப் பொருளில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில்   ஆண், பெண் இரு பலாரும் கலந்து கொண்டு 130 பேர் இரத்தங்களை காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கிக்கு தானமாக வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments