மண்முனைப்பற்று பிரதேசத்திற்குற்பட்ட கர்பலா மொடர்ன் பார்ம் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றது



ஆதிப் அஹமட் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும்,காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் பிரதியமைச்சருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் நிதியொதுக்கீடு 10 இலட்சம் ரூபா செலவில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குற்பட்ட கர்பலா மொடர்ன் பார்ம் வீதி கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.



இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் அண்மையில் இடம்பெற்றபோது யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த வீதியானது மிக நீண்ட காலமாக மணல் நிறைந்த வீதியாக கவனிப்பாரற்று காணப்பட்டதால் தாங்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வந்ததாகவும்,இவ்வீதியை அபிவிருத்தி செய்தமையிட்டு தாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு  தங்களின் நன்றிகளையும் தெரிவிப்பதாகவும்  இதன்போது பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


No comments