-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக வி. மயில்வாகனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை வெள்ளிக்கிழமை 14.12.2018 பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். மன்சூர், ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மனோகரன், மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் நவநீதன் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதலாவது விஞ்ஞான பட்டதாரிகளில் ஒருவரான  மயில்வாகனம், கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து பட்டிருப்பு கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவிகளை வகித்தார்,

பின்னர் வடகிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நான்கரை  வருடம் திட்டமிடல் பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், மீண்டும் பட்டிருப்பு கல்வி வலயம், கல்முனைக் கல்வி வலயம் ஆகியவற்றில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை வகித்தார், 2013ஃ01ஃ01 முதல் தரம் ஒன்று அதிகாரியாக அவர் நியமனம் பெற்றிருந்தார்.


No comments